| அதீதமா இத்தயிலம் கொண்டுபாரு அப்பனே குஷ்டமது கடைகெட்டோடும் துதீதமுடன் மேகமென்ற திருபதும்போம் துலையாத கவுசையொடு பொருமல்போகும் வதீதமுடன் சூலையது விட்டேயோடும் வாகான கிரந்திமுதல் சிரங்குபோகும் கதீதமுடன் நரம்புவலி ரணங்கள்போகும் கண்ணொளிவு காட்டுவது தயிலமாமே |