| பாரேதான் சித்தர்களுக் குகந்தவேதை பாராளும் ராசர்களும் மெச்சுவார்பார் சீரேதான் இவ்வேதை சிடிகைவேதை சிறப்புடனே நாதாக்கள் கண்டவேதை நேரேதான் நாலுக்கோர் தங்கஞ்சேர்த்து நேர்மையுடன் வாரடித்துப் புடத்தைப்போடு கூரேதான் மாற்றதுவும் எட்டதாகும் குணமான போகரிஷி கூறினாரே |