| உண்மையாம் இன்னமொரு கருமானங்கேள் உத்தமனே சொல்லுகிறேன் மைந்தாகேளு தன்மையாம் மையதனையெடுத்துக்கொண்டு தகைமையுடன் புருவத்தில் மைதான்தீட்டி கண்மையுடன் வாகாஷம் பார்க்கும்போது கனிவாக வேழுமண்டலமுந்தோன்றும் பன்மையாம் ஆகாஷவதிசயங்கள் பாங்குடனே தான்தெரியும் பாருளோர்க்கே |