| தானான வண்டதுவுங் கீதம்பாடும் தாக்கான கீதமது ஓசைகாட்டும் கோனான குருநாதர் சித்தர்தாமும் குடியிருப்பு எந்நேரம் விருட்சந்தன்னில் தேனான முனிகூட்டம் மெத்தவுண்டு தெள்வான கானகத்தில் விருட்சந்தன்னை பானான பலரிஷியுங் கண்டுதேர்ந்து பாரினிலே சித்தர்களுக் குரைத்தார்தாமே |