| தாக்கவே ரவிதானுங் கட்டிப்போகும் தகைமையுடன் செம்பதுவும் வூறலேகி நோக்கமுடன் செம்பதுவும் வர்ணங்காட்டும் நேராக வசம்புநிகர் வெள்ளிசேர்த்து பாக்கவே வந்திடைக்கு தங்கஞ்சேர்த்து பாண்மையுடன் தானுருக்கி யெடுப்பாயானால் தூக்கமுடன் மாற்றதுவும் மிகவுமாகி துப்புறவாடீநு தங்கமது காணும்பாரே |