| சிவயோகி என்றாலே மெத்தவுண்டு சிவன்தனையே கண்டவர்போல் வார்த்தைசொல்வார் தவயோகிபோல் ஒருவேஷம் பூண்டு சர்வகலை யறிந்ததொரு ஞானிபோல் பவங்கண்ட ரிஷியென்று பெயருங்கொண்டு பாரினிலே பசப்பியல்லோ பொருள்தான்கொள்வார் சவம்போல மூச்சிதனை யடக்கிக்கொண்டு தாரணியில் பிர்மைகொள்ள நடப்பார்தாமே |