| தானான காண்டத்தின் மூன்றாங்காண்டம் தகைமையுள்ள கருக்குருவும் யாவுஞ்சொன்னேன் வேனான என்னையர் காலாங்கிநாயர் விருப்பமுடன் உபதேச மனேகஞ்சொன்னார் கோனான வுபதேசம்யாவுங்கேட்டு கொட்டினேன் சத்தமென்ற காண்டமப்பா பானான காண்டமேழாயிரந்தான் பாகமுடன் பாடிவைத்தேன் போகர்தாமே |