| காணவே சமாதியது மேற்புரத்தில் கனகமணி நவரத்தின சமாதிகண்டார் வேணவே வுபசாரமுடன் காலாங்கிநாதர் விடுபட்டுச் சமாதியிடம் சென்றாரங்கே நாணமுடன் தலைகுனிந்து வார்த்தைகூறி நலம்பெறவே சமாதியிடம் சென்றிட்டாராம் பாணம்போ லசரீரிவாக்கியந்தான் பாரினிலே சத்தமது கேட்கலாச்சே |