| தானான யுகத்திலப்பா காலாங்கிநாதர் தகைமையுடன் சாபமதை தீர்த்துக்கொண்டார் கோனான என்னையர்காலாங்கிநாதர்குவலயத்தில் கோடியுகம் குளிகைபூண்டார் தேனான ரிஷிகளிட சாபத்தாலுந் தேறினார் ராவணனார்கோட்டைக்குள்ளே மானான சமாதியிடம் கிட்டிப்போனார் மகத்தான தேவமுனி கண்டிட்டாரே |