| பாலித்தேன் இன்னமொரு மார்க்கமப்பா பாருலகில் யாருந்தான் சொன்னதில்லை சாலித்த கிரேதாயினுகத்திலப்பா சத்தசாகரம் பொங்கிமேல்வழிந்து வாவித்து கோட்டையது ஜலமேகொண்டு மண்மூடி ஜலமதுவும் மிகவேகோர்த்து பாலித்து தேசமெல்லா முழுகிற்றென்று பாலித்தார் காலாங்கி எனக்குந்தானே |