| பாரேதான் மெழுகெடுத்து துருசுவெள்ளை பதமுடனே தான்சேர்த்து மெழுகதாக்கி நேரேதான் ரவிதனிலே பத்துக்கொன்று நேர்மையுடன் தானுருக்கிக் கொடுத்துப்பாரு வேரேதான் கரியோட்டி லூதிப்போடு வேகமுடன் செம்பதுவும் வர்ணங்காணும் கூரேதான் மதிதனிலே நாலுக்கொன்று கொடுத்துருக்க மாற்றதுவும் மாறதாமே |