| தாமேதான் போதனைகள் யாவுங்கேட்டு சாங்கமுடன் எட்டாங்கால் தன்னிற்சென்றேன் வேமேதான் மேல்வரையிற் சென்றபோது வியர்வான ருத்திரகாலன் தவசிருப்பான் தாமேதான் தவநிலையைக் கண்டபோது சாஷ்டாங்கம் தாள்பணிந்து கரங்குவித்து நாமமுட காலாங்கி தனைநினைத்து நாதரிஷி பாதாம்புயத்தை நாடினேனே |