| பாரென்ற நிருவிகற்ப சமாதிகேளு பாங்கான தத்துவநிலை சமாதிமுத்தி காரென்ற சத்தானு வித்தைமுத்தி தன்னைத்தான் மறந்து தூக்கமுறு மயக்கம்போல வாரென்ற பிறசத்தம் காதில்கேளா மருவியந்த பூரணத்தே லயித்துநிற்கும் நேரென்ற அசைதன்னியமாகப்போனால் நிருவிகற்ப சமாதியென்ற நேர்மையாச்சே |