| காணுமே நாதாக்கள் சித்துதாமும் காட்டினார் மகிமைகள் மெத்தவுண்டு தோணவே வரைக்குள்ளே செல்லும்போது துறையான சமாதிமுகம் கண்டுசென்றேன் வேணவே ருத்திரனார் சமாதிபக்கம் விட்டார்கள் எந்தனையு முனிவர்தானும் நாணவே யடியேனும் காலாங்கிதம்மை நலமுடனே தாள்பணிந்து நவின்றிட்டேனே |