| பண்பான நாலுபக்கம் கோட்டைவாசல் பளிங்குமண்டபங் களங்குண்டு திண்பான தடாகங்கள் குகைகளுண்டு திடமான குன்னுகளில் தவசிருப்பார் பண்பான தபசியிடம் யானும்சென்றேன் கருத்துடனே சித்தரெல்லாம் எனைக்கண்டார்கள் வண்புடனே யடியேனும் தாள்பணிந்து வணக்கமுடன் குருவணக்கமோதிட்டேனே |