| சொல்லவென்றால் நாவுமில்லை பாவுமில்லை சோதியுடல் மலைமீது தோற்றங்காணும் வெல்லவே சோதிரிஷி வியாசர்தானும் வினோதமுடனங்கிருப்பார் கொலுக்கூடந்தான் புல்லவே சித்தர்களின் கூட்டவர்க்கம் பூலோகமிடங்கொள்ளாததீதமெத்த பல்லவே கொங்கணரின் கூட்டத்தார்கள் பகரவேமுடியாது பண்பதாமே |