| வசனித்த போதையிலே வடியேன்மீது வாகுடனே களிகூர்ந்து கூறலுற்றார் துசனித்து சமாதியிடம் கொண்டுசென்றார் தோற்றமுடன் பிரம்மாவின் வாசல்கண்டேன் நிசமுடனே கோட்டைக்குள் சுரங்கம்கண்டேன் நெடிதான சுரங்கத்தின் வழியைக்கண்டேன் புஜமுடைய கிங்கிலியர் ஆயிரம்பேர் புனிதமுடன் கொலுவிருந்தார் ரிஷிகள்தாமே |