| கொல்லுவார் அவர்கள்பதி செல்லவேண்டாம் கொடிமுடியுஞ் சித்தரப்பா கோடியுண்டு வெல்லவே சமாதியிடந் தானழைப்பார் விருதுமிகப் பேசியல்லோ சாபமீவார் செல்லவே ஞானத்தின் வழிகேட்பார்கள் சேறான முப்பூவின் மார்க்கங்கேட்பார் புல்லவே நாதத்தின் முறையுங்கேட்பார் புகழான வுறுக்கினத்தின் கிடங்கேட்பாரே |