| வந்திட்டேன் என்றலுமே சித்தர்தாமும் வணக்கமுடன் இரண்டாங்கால் வரையிற்கொண்டு முந்திட்டு மூலரிட பாதங்காண முனையான சமாதியிடம் நிற்கும்போது கந்திட்ட தேவரிஷிக் கொப்பாஞ்சித்தர் கருவான திருவாசர் படிகார்ப்பார்கள் தந்திட்ட வாசலது திறக்கவென்று தாட்சியுடன் தேவரிஷி வினவிட்டாரே |