| பாரேதான் என்றலுமே கணபதிதானும் பாங்குடனே போகரிஷி திடுக்கிட்டேங்கி நேரேதான் கணபதியை சாஷ்டாங்கித்து நிலைமைபெற சுவாமிஎனக்கெதியேதென்ன சாரவே என்மீதில் பட்சம்வைத்து சாங்கமுடன் எந்தனுக்கு உபதேசித்து சூரனாமிருக்குமிடம் காணவென்று சுந்தரரும் வாக்களித்தார் சூட்சந்தானே |