| பிசினுடனே கருங்காலி பிசினியாகும் பிசகில்லா பூதத்தின் பிசினியாகும் நசிதமுள்ள குங்குமத்தின் பிசினியாகும் நலமான காட்டத்தி பிசினியாகும் உசிதமுள்ள பலாமரத்தின் பிசினியாகும் உத்தமனே ஊஞ்சனுட பிசினியாகும் கசிதமுள்ள விலாவினுட பிசினியாகும் கருவான கசகசாபிசினுங்காணே |