| புடமாறி யெடுத்துப்பார் பொன்னேதங்கம் புஷ்பம்போல் குங்குமது நிறமேயாகும் திடமான தங்கமது பிறப்பேயாகும் தேசத்தில் கிட்டாது சிவயோகிக்கு சடமழியாக் கற்பமதுவுண்டுகொண்டு சதாகாலம் நிஷ்டையிலே இருப்பாயப்பா மடமானின் ஆசைதனைவிட்டொழித்து மகிடிநச்சியுடன் எப்போதும் வாழலாமே |