| என்னவே சிகாரமது நெருப்பாரம்மா இசைந்துநின்ற வகாரமது மயிர்ப்பாலமாம் உண்ணவே இரண்டும் விட்டால் ஒன்றாயொன்றில் சிகாரத்தையொளிக்காண்டு மன்னவே யோகாரமும் தில்லசவுமுந்தும் வருந்தியே இதுநன்று கள்ளகன்று தன்னவே இரணடொளித்தான் சாந்தியாவான் தனித்திரண்டுமாறுக்குந் தள்ளநன்றே |