| கூத்தான கைபாகம் செடீநுபாகந்தான் குவலயத்தில் கோடியுண்டு யார்தான்காண்பர் மத்தான சாத்திரத்தில் மறைத்துவைத்தார் மார்க்கமுடன் அடியேனும் தாள்பணிந்து வேத்தான காலாங்கிநாயர்பாதம் விருப்பமுடன் போற்றியல்லோ தொழுதேன்யானும் நேர்த்தியுடன் பாடிவைத்தேன் போகர்யானும் நேர்மையுடன் மாணாக்கள் பிழைக்கத்தானே |