| தானான சாத்திரத்தில் அனேகம்பேர்கள் சட்டமுடன் பாடிவைத்தார் வேண்டுமாற்கம் வேனான வெகுநூலில் வெள்ளிசொன்னார் வெளியாகச்சொல்லவில்லை இந்தபாகம் பானான காலாங்கி தனைவணங்கி பாடினேன் சத்தகாண்டம் பண்பதாக கோனான குருவருளால் அடியேன்தானும் குவலயத்தில் இரைத்துவிட்டேன் மாந்தர்க்காமே |