| எட்டான சாமமது யெரிக்கும்போது யெழிலான சாரமது சிவப்புயேறி திட்டான கட்டியது சிவந்துகாட்டும் திறமுடனே கவசமதை திறந்துபாரு மட்டான சிவப்புடனே மங்கல்காட்டும் மார்க்கமுடன் கட்டிதனை காற்றில்வைநீ கட்டான செந்தூரம் பூர்த்துக்காட்டும் கடுஞ்சுறுக்கு வேதையிது வோடுமாமே |