| ஆமென்ற சாம்பவிமுன் திரையைக்காட்டி ஐங்கோணக் குருபதத்தின் புகழைக்கண்டு நாமென்ற நாதவிந்து ஈசன்சத்தி நற்கமலம் ஆயிரத்தெட்டு இதழின்மையம் தாமென்ற ரவிகோடி மதிதான்கோடி சார்ந்துநின்ற மூலத்தில் சதமாங்கோடி வேமென்ற அவ்வொளிக்கு நின்றுமேலே இருக்கிறதே தேவியென்ற பிரமன்தானே |