| விரும்பவே காண்டமது ஏழுஞ்சொன்னேன் வெளியாகக் கருவெல்லாந் திறந்துபோட்டேன் துரும்புமுத லொளிக்கவில்லை சீனத்தார்க்கு துப்புரவாயுரைத்துவிட்டேன் பட்சம்வைத்து கரும்புபோல் ஏழாயிரக்காவியந்தான் கருத்துடனே பாடிவிட்டேன் மாந்தர்கப்பா அரும்பொன் மனிதனைப்போல் இரண்டாங்காண்டம் அப்பனே முத்துமது முற்றதாமே |