| பார்த்தேனே யின்னம்வெகு சித்தர்நூலும் பலபலவாங்கண்டறிந்தேன் நுணுக்கந்தன்னை தீர்த்தேனே நவகோடி ரிஷிகள்தாமும் திறமுடனே வனேகநூல் பாடிவிட்டார் சேர்த்ததொரு பதிணெண்பேர் சித்தர்தாமும் சிறப்புடைய நூலெல்லாம் தெளிந்துபார்த்தேன் நேர்த்தியுடன் காலாங்கிபாதம்போற்றி நேர்மையுடன் பாடினேன் ஏழாயிரந்தானே |