| கண்டிட்டேன் யாக்கோபு நூலுங்கண்டேன் கருவான டமரகனார் நூலும்பார்த்தேன் தூண்டிட்ட வரரிஷியார் நூலும்பார்த்தேன் துரைராஜர் வேதமுனி நூலும்பார்த்தேன் கொண்டிட்ட வள்ளுவனார் நூலுங்கண்டேன் கூரான நந்தியுட நூலுங்கண்டேன் வெண்டிட்ட சதாநந்தர் நூலும்பார்த்தேன் றெளியானபிரமமுனி நூல்பார்த்தேனே |