| தானான ரோமரிஷி நூல்கள் கண்டேன் தாக்கான பரிபாஷை கோர்வைநாலு மானான பெருநூல் காவியங்களெட்டு மார்க்கமுடன் திரட்டுகளில் பதினாராகும் வேனான தீட்சைகளில் யெட்டுகாண்டம் வெளியான காண்டத்துக்காயிரந்தான் பானான பலதிரட்டு பத்துக்கோர்வை பாடிவிட்டார் சில்லரையில் முன்னூராமே |