| தானேதான் சாத்திரத்தில் எண்ணூர்கண்டேன் தனியான நாலுமறுநூறும் பார்த்தேன் மானேதான் காவியங்கள் வைந்தும் பார்த்தேன் மகத்தான வெண்ணூறு வதீதம் பார்த்தேன் வேனேதான் சௌமியங்கள் எட்டும்பார்த்தேன் வேதாந்தக்காவியங்கள் ஆறும்பார்த்தேன் தேனேதான் பலதிரட்டுக் கோர்வைநாலுந் தெளிவான சாலமது எட்டுயெட்டே |