| புவியான மாந்தர்களில் கருவாளியுண்டு புத்தியுள்ளான் கண்டறிவாம் திறப்புமார்க்கம் கவியான பாடல்களின் மறைவுகாணான் கண்டவன்போல் பேசுவான் கழுதைமாண்மன் நபியானக் கடவுளுக் கொலயாஞ்சித்தர் நவின்றிட்ட நூல்களையே பழிப்புஞ்சொல்வான் அபிமான மில்லாமல் திட்டிப்பேசி அழிந்திடுவான் படைநரகில் பாவியாமே |