| வாடிநகவென்றா லின்னமொரு கருமானங்கேள் வாகான செந்தூரம் மண்டலந்தான் நீடிநகவென்றால் தேகமது வுளுப்புராது நீணலித்தில் எப்போதுமிருக்கலாகும் தாடிநகவென்றால் தேகமது மழியாதாகும் சதாகாலம் கற்பமுண்டார்க் கொப்பாவார்பார் மூடிநகவென்றால் தயிலமது செப்பக்கஏளும் முளையான பாகமது வுரைப்போம்தாமே |