| ஆட்டவென்றால் மெழுகதுவும் நாலுசாமம் அப்பனே மைபோலவரைத்துமைந்தா நீட்டமுடன் சிமிடிநதனிலே பதனம்பண்ணு நிலையான குடோரியது சொல்லப்போமோ வாட்டமுடன் வெள்ளிசெம்பில் பத்துக்கொன்று வலுமையுடன் தானுருக்கி குடோரியொன்று நேட்டமுடன் வுருக்குமுகந் தன்னிலீய நிகரான களங்கமது போலாம்பாரே |