| கண்டிட்ட போதையிலே சித்தர்தாமும் கடுகெனவே யாரப்பா வென்றுகேட்க மண்டிட்டு அடியேனும் தாள்பதிந்து மகாதேவர் காலாங்கி சிஷனென்றேன் தெண்டிட்ட யெந்தனையும் கேள்விகேட்டார் தெளிவுடனே வுத்தாரஞ் சொன்னேனப்பா விண்டிட்டு நானவரை வணங்கிமிக்க வேதாந்தம் சித்தாந்தம் கேட்டேன்பாரே |