| சேர்வையாம் வடிவேலர் தன்னைக்கண்டார் சேனைமுதல் சரிசனங்கள் யாவும்பார்த்தார் பார்வையாம் சித்தர்முனி ரிஷிகள்தாமும் பட்சமுடனென்மீதில் கிருபைகூர்ந்து நேர்மையுடன் வரமெனக்கு யீந்தாரப்பா நெறியுடனே தேவரதம் நடத்தினேன்யான் கூர்மையுடன் மலையோரம் சுற்றிவந்து குறிப்புடனே சீனபதி யிறக்கிட்டேனே |