| குருவான வாதிகட்கு வழியுஞ்சொல்வேன் குறிப்புடனே சமாதிகட்கு நிலையுஞ்சொல்வேன் பருவான பூநீருக்குறியுஞ்சொல்வேன் பாரினிலே வைத்தியற்கு வுணவுஞ்சொல்வேன் திருவான மூலிவகைபோக்கு சொல்வான் திரளான கற்பத்துக் குறுதிசொல்வான் முருவான சத்துரு மித்துருவுஞ்சொல்வான் முறையான சிமிட்டுவித்தைக் கருசொல்வானே |