| தானான பொன்னதுவு மாற்றுமாகும் சார்வாகப் புடத்துக்கு வுறுதிதங்கம் மானான தங்கமது பசுமைமெத்த மார்க்கமுடன் சித்தர்கள்தான் செடீநுயும்வேதை பானான கருவாளி காண்பானாகில் படுமுன்னே சுக்கனைச்சுன்னம்பண்ணி தேனான சரக்குவகை யாவுங்கொன்று தேசத்தில் வாதிகட்கு குருவாவானே |