| எரிக்கையிலே கமலமென்ற சிறுதீயப்பா யென்மகனே யாறுநாள் யெரிநேரப்பா கரிகியல்லோ வுப்பெல்லாங் கறுத்துக்காணும் கனகமென்ற செம்பதுவு மக்கியல்லோ நொரிக்கியே சரக்குடனே செம்புசேர்ந்து கொடிதான வீரத்துக் காரமேறி பரிக்கியே வுட்கொண்டு காரசாரம் பாங்குடனே யேறியல்லோ சிவக்குந்தானே |