| இருக்கலாம் கற்பாந்திரகாலமட்டும் யிளப்பில்லை தவிர்ப்பில்லை ஈளையில்லை முறுக்குடனே தேகமது இருக்கிக்காட்டும் கூதண்டங்கொண்டவரு முமக்கீடுண்டோ பொருக்கவே முடியாது வன்னிமீறும் பூதலத்தில் நீயுமொரு சித்தனாவாடீநு வெடுக்கவே சமுசார மாடீநுகைதன்னை விட்டொழித்து நிற்பதுவே சமாதியாமே |