| உரைத்துமே புசுண்டருட பிறப்பைக்கேளு உகந்துமது நடனங்கள் களிக்கும்போது பரிந்துமே பரிதிமுதற் சோமனையுந் தரித்துப் பராபரமும் பார்வதியும் பார்த்தாரத்தை நிரைத்துமே சிவகளையை காமம்போல சேர்ந்தனைய யன்னமங்கே நிறைக்கெர்ப்பமாச்சு இரைத்துமே இருபத்து ஒன்றுபிள்ளை ஈசனுடகளையாலே புசுண்டராச்சே |