| திறக்கையிலே சத்தியரிச்சந்திரன்தன் திறலான சமாதியது யென்னசொல்வேன் சுரங்கமுடன் சுடரொளிபோல் காணலாச்சு சூக்குமமாந் தேகமது மின்னல்போலாம் இரங்கவே மூன்றுபடி நடந்துபோனேன் இராஜனா மரிச்சந்திர னருகில்சென்றேன் வரங்கொண்ட வரிச்சந்திர னென்னைப்பார்த்து யாரப்பா வந்தவனீ ரென்றார்பாரே |