| தானான போகரென்ற போதேயப்பா தயவுடனே யென்மீதில் பட்சம்வைத்து கோனான திருச்சங்கு ராஜன்தானும் கொற்றவனாரெந்தனுக்கு வுபதேசித்தார் பானான புத்திமதி மிகவுரைத்து பாங்குடனே குளிகைகொண்டு போமிடத்தே வேனான சித்தர்முனி ரிஷிகள்தாமும் வேணுமென்றே சபித்திடுவார் தப்பிக்கொள்ளே |