| உரைத்தேனே யெந்தனிட தீரத்தாலே வுத்தமனே காலாங்கி கடாட்சந்தன்னால் திறப்புடனே காலாங்கி சீஷனென்றேன் திகழுடனே சீர்பாதங்காணவென்று மரைப்புடனே குளிகையது பூண்டுகொண்டு மார்க்கமுடன் சீனபதிவிட்டு நீங்கி விரைப்புடனே சமாதியிடங்கண்டுவந்து விருப்பமுடன் வந்தேனே போகர்தானே |