| மூடனென்று சொல்லுகையி லடியேன்தானும் முடிவணங்கி தெண்டனிட்டு கெதியேதென்ன நாடென்ற பதிதனிலே வாழுஞ்சித்தர் நாமிருக்கு மிடந்தனையே யறியமாட்டார் மாடென்ற மனிதரப்பா முழுமக்கள்தாமு மடையர்களோ கோடான கோடிபேர்கள் கூடென்ற கூடுவிட்டுப் பாடீநுந்தேனென்று குவலயத்தில் கூக்குரலு மிகவுண்டாச்சே |