| மாளாத சித்தென்னைக் கண்டபோது மகிதலத்தி லாரப்பா காணவந்தீர் சூளாத ஜெனமில்லாச் சமாதியுள்ளே சூட்சமுடன்வந்தலுவலென்ன வென்றார் கோளான வார்த்தைகளும் பேசவேண்டாம் குறிப்புடனே இரண்டொரு வார்த்தைகள் சொல்லி தாளான சமாதிதனை மூடிப்போடு தரணியள்ள சித்தரெல்லாம் வருவார்தாமே |