| விண்ணவே தலைவாசல் பக்கம்போனேன் விராஜனிடகாவல் கணமாயிரம்பேர் திண்ணமுட னங்கிருந்தார் தவசியோர்கள் தீர்க்கமுட னெந்தனையுங் கண்டிட்டார்கள் எண்ணமுடன் யானுமல்லோ கண்டபோது எனைக்கொல்ல திருஷ்டித்துப் பார்த்தாரென்னை அண்ணலென்ற காலாங்கி தனைநினைந்தேன் அப்போதே யெந்தனையுஞ் சூடிநந்திட்டாரே |