| கண்டேனே காலாங்கி கடாட்சத்தாலே கருணைபெற யெந்தனுக்கு விடைதாவென்ன தெண்டமுடன் விடைபெற்று நிடததேசம் திரும்பினேன் குளிகைகொண்டு வெகுகாலந்தான் தண்டுலவு மாலயனைதரிசித்தேதான் சாங்கமுடன் நளபதியைக்காணவென்று அண்டமுடன் குளிகையிட்டு ராஜதேகம் அப்பனே வந்திட்டேன் யானும்பாரே |