| என்றவுடன் பெண்களெல்லாம் அதிசயித்து ஏற்றமுள்ள சிறுபாலா யேன்தான்வந்தீர் கன்றுடனே பசுநீங்கும் கதையைப்போல பாங்கியர்க்கு பரிதாபமெடுத்துச் சொன்னேன் நன்றுடனே காலாங்கி சீஷணம்மா நாட்டிலுள்ள வளமெல்லாங் காணவந்தேன் தென்திசையில் நானிருந்து குளிகைபூண்டு சிறப்பான சீனபதிபோனேன்தானே |